குறள்: 1216 122. கனவுநிலை உரைத்தல்

காமத்துப்பால்கற்பியல்

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்காதலர் நீங்கலர் மன்

மு. வரதராசனார் உரை

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

சாலமன் பாப்பையா உரை

கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.

மு. கருணாநிதி உரை

நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே

கனவுநிலை உரைத்தல் அதிகாரம் முழுவதும்