குறள்: 1217 122. கனவுநிலை உரைத்தல்

காமத்துப்பால்கற்பியல்

நனவினான் நல்காக் கொடியார் கனவினான்என்னெம்மைப் பீழிப் பது

மு. வரதராசனார் உரை

நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

சாலமன் பாப்பையா உரை

நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?

மு. கருணாநிதி உரை

நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?

கனவுநிலை உரைத்தல் அதிகாரம் முழுவதும்