குறள்: 1219 122. கனவுநிலை உரைத்தல்

காமத்துப்பால்கற்பியல்

நனவினான் நல்காரை நோவர் கனவினான்காதலர்க் காணா தவர்

மு. வரதராசனார் உரை

கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை

இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.

மு. கருணாநிதி உரை

கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்

கனவுநிலை உரைத்தல் அதிகாரம் முழுவதும்