குறள்: 1220 122. கனவுநிலை உரைத்தல்

காமத்துப்பால்கற்பியல்

நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்காணார்கொல் இவ்வூ ரவர்

மு. வரதராசனார் உரை

நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?

சாலமன் பாப்பையா உரை

என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?

மு. கருணாநிதி உரை

என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?

கனவுநிலை உரைத்தல் அதிகாரம் முழுவதும்