குறள்: 1229 123. பொழுதுகண்டு இரங்கல்

காமத்துப்பால்கற்பியல்

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து

மு. வரதராசனார் உரை

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

சாலமன் பாப்பையா உரை

இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.

மு. கருணாநிதி உரை

என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது

பொழுதுகண்டு இரங்கல் அதிகாரம் முழுவதும்