குறள்: 1221 123. பொழுதுகண்டு இரங்கல்
மு. வரதராசனார் உரை
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!
காதலர் இல்லாதபோது, பகலும் இருளும் மயங்குகின்ற மாலைப்பொழுது கண்டு தலைவி வருந்துதலைச் சொல்வது. மாலை வந்தவிடத்து அது துணையில்லா மணந்த மகளிர்க்குத் துன்பந் தருவதை இவ்வதிகாரப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. காலையில் அரும்பிய இக்காதல் நோய் பகலெல்லாம் முதிர்ந்தஅரும்பாக-போதாக உள்ளது. மாலை வந்ததும் அது மலர்ந்து முழுஅளவில் வருத்துகிறது என்கிறது இப்பாடல் தொகுப்பு.
குறள்: 1221 123. பொழுதுகண்டு இரங்கல்
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!
குறள்: 1222 123. பொழுதுகண்டு இரங்கல்
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?
குறள்: 1223 123. பொழுதுகண்டு இரங்கல்
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
குறள்: 1224 123. பொழுதுகண்டு இரங்கல்
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.
குறள்: 1225 123. பொழுதுகண்டு இரங்கல்
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?
குறள்: 1226 123. பொழுதுகண்டு இரங்கல்
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
குறள்: 1227 123. பொழுதுகண்டு இரங்கல்
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
குறள்: 1228 123. பொழுதுகண்டு இரங்கல்
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது.
குறள்: 1229 123. பொழுதுகண்டு இரங்கல்
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.
குறள்: 1230 123. பொழுதுகண்டு இரங்கல்
( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.