குறள்: 1223 123. பொழுதுகண்டு இரங்கல்

காமத்துப்பால்கற்பியல்

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்துன்பம் வளர வரும்

மு. வரதராசனார் உரை

பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

சாலமன் பாப்பையா உரை

அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

மு. கருணாநிதி உரை

பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது

பொழுதுகண்டு இரங்கல் அதிகாரம் முழுவதும்