குறள்: 1222 123. பொழுதுகண்டு இரங்கல்
புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்வன்கண்ண தோநின் துணை
மு. வரதராசனார் உரை
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?
சாலமன் பாப்பையா உரை
பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?
மு. கருணாநிதி உரை
மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?