குறள்: 1231 124. உறுப்புநலன் அழிதல்
மு. வரதராசனார் உரை
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.
உறுப்புநலனழிதல் என்ற அதிகாரம் தலைவன் பிரிவைத் தாங்கமுடியாத தலைவியின் உறுப்புக்கள் அழகு இழப்பதைச் சொல்கிறது. தலைவன் பொருள்தேடிப் பிரிந்து சென்றபின் அவன் நினைவாகவே உள்ளாள் தலைமகள். அவனையே நினைந்து நினைந்து அழுது கொண்டிருந்ததால் கண்கள் ஒளி இழந்தன. அவன்உடனிருந்த நாட்களில் பூரித்திருந்த அவளது தோள்கள் வருத்தத்தால் வாடி, தொடி கழலும் அளவு, மெலிந்தன. தலைவன் நிலை என்ன? அவன் வினைமுடிந்து திரும்பும் நேரமிது. அதுசமயம் காதலியையும் பிரியும்போது நிகழ்ந்தனவற்றையும் நினைக்கிறான். அவளது நெற்றியும் கண்ணும் ஒன்றன்பின் ஒன்றாகப் பசந்தது அவனது எண்ண ஓட்டத்தில் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இன்னும் மற்ற உறுப்புக்களும் அழகிழந்திருக்கும்; விரைந்து அவளிடம் சென்று ஆற்ற வேண்டும்! என்று அவன் எண்ணுகிறான் என்ற குறிப்புடன் அதிகாரம் நிறைவு பெறுகிறது.
குறள்: 1231 124. உறுப்புநலன் அழிதல்
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.
குறள்: 1232 124. உறுப்புநலன் அழிதல்
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.
குறள்: 1233 124. உறுப்புநலன் அழிதல்
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
குறள்: 1234 124. உறுப்புநலன் அழிதல்
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.
குறள்: 1235 124. உறுப்புநலன் அழிதல்
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.
குறள்: 1236 124. உறுப்புநலன் அழிதல்
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
குறள்: 1237 124. உறுப்புநலன் அழிதல்
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?
குறள்: 1238 124. உறுப்புநலன் அழிதல்
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
குறள்: 1239 124. உறுப்புநலன் அழிதல்
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.
குறள்: 1240 124. உறுப்புநலன் அழிதல்
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.