குறள்: 1235 124. உறுப்புநலன் அழிதல்
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடுதொல்கவின் வாடிய தோள்
மு. வரதராசனார் உரை
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.
சாலமன் பாப்பையா உரை
வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.
மு. கருணாநிதி உரை
வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன