குறள்: 1236 124. உறுப்புநலன் அழிதல்
தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்கொடியார் எனக்கூறல் நொந்து
மு. வரதராசனார் உரை
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
சாலமன் பாப்பையா உரை
வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.
மு. கருணாநிதி உரை
என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்