குறள்: 1265 127. அவர்வயின் விதும்பல்
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்நீங்குமென் மென்தோள் பசப்பு
மு. வரதராசனார் உரை
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை
என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.
மு. கருணாநிதி உரை
கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்