குறள்: 1266 127. அவர்வயின் விதும்பல்

காமத்துப்பால்கற்பியல்

வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்பைதல்நோய் எல்லாம் கெட

மு. வரதராசனார் உரை

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

சாலமன் பாப்பையா உரை

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

மு. கருணாநிதி உரை

என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்

அவர்வயின் விதும்பல் அதிகாரம் முழுவதும்