குறள்: 1282 129. புணர்ச்சி விதும்பல்
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின்
மு. வரதராசனார் உரை
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.
மு. கருணாநிதி உரை
பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்