குறள்: 1283 129. புணர்ச்சி விதும்பல்
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண்
மு. வரதராசனார் உரை
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
சாலமன் பாப்பையா உரை
என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.
மு. கருணாநிதி உரை
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை