குறள்: 1284 129. புணர்ச்சி விதும்பல்

காமத்துப்பால்கற்பியல்

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றதென் னெஞ்சு

மு. வரதராசனார் உரை

தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

சாலமன் பாப்பையா உரை

தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.

மு. கருணாநிதி உரை

ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு

புணர்ச்சி விதும்பல் அதிகாரம் முழுவதும்