குறள்: 1295 130. நெஞ்சொடு புலத்தல்

காமத்துப்பால்கற்பியல்

பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு

மு. வரதராசனார் உரை

( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

சாலமன் பாப்பையா உரை

என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.

மு. கருணாநிதி உரை

என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்

நெஞ்சொடு புலத்தல் அதிகாரம் முழுவதும்