குறள்: 1296 130. நெஞ்சொடு புலத்தல்

காமத்துப்பால்கற்பியல்

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சு

மு. வரதராசனார் உரை

காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

சாலமன் பாப்பையா உரை

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

மு. கருணாநிதி உரை

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது

நெஞ்சொடு புலத்தல் அதிகாரம் முழுவதும்