குறள்: 1297 130. நெஞ்சொடு புலத்தல்
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்மாணா மடநெஞ்சிற் பட்டு
மு. வரதராசனார் உரை
காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.
சாலமன் பாப்பையா உரை
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.
மு. கருணாநிதி உரை
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்