குறள்: 1298 130. நெஞ்சொடு புலத்தல்

காமத்துப்பால்கற்பியல்

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு

மு. வரதராசனார் உரை

உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.

மு. கருணாநிதி உரை

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்

நெஞ்சொடு புலத்தல் அதிகாரம் முழுவதும்