குறள்: 1299 130. நெஞ்சொடு புலத்தல்

காமத்துப்பால்கற்பியல்

துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடையநெஞ்சந் துணையல் வழி

மு. வரதராசனார் உரை

ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?

சாலமன் பாப்பையா உரை

ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?

மு. கருணாநிதி உரை

துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?

நெஞ்சொடு புலத்தல் அதிகாரம் முழுவதும்