குறள்: 1300 130. நெஞ்சொடு புலத்தல்

காமத்துப்பால்கற்பியல்

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடையநெஞ்சம் தமரல் வழி

மு. வரதராசனார் உரை

ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

சாலமன் பாப்பையா உரை

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

மு. கருணாநிதி உரை

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்

நெஞ்சொடு புலத்தல் அதிகாரம் முழுவதும்