குறள்: 1313 132. புலவி நுணுக்கம்

காமத்துப்பால்கற்பியல்

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று

மு. வரதராசனார் உரை

கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.

மு. கருணாநிதி உரை

கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்

புலவி நுணுக்கம் அதிகாரம் முழுவதும்