குறள்: 1315 132. புலவி நுணுக்கம்

காமத்துப்பால்கற்பியல்

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்

மு. வரதராசனார் உரை

இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.

சாலமன் பாப்பையா உரை

காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.

மு. கருணாநிதி உரை

``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி

புலவி நுணுக்கம் அதிகாரம் முழுவதும்