குறள்: 1321 133. ஊடலுவகை

காமத்துப்பால்கற்பியல்

இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்வல்ல தவரளிக்கும் ஆறு

மு. வரதராசனார் உரை

அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

சாலமன் பாப்பையா உரை

அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.

மு. கருணாநிதி உரை

எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது

ஊடலுவகை அதிகாரம் முழுவதும்