குறள்: 135 14. ஒழுக்கம் உடைமை
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லைஒழுக்க மிலான்கண் உயர்வு
மு. வரதராசனார் உரை
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.
சாலமன் பாப்பையா உரை
பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.
மு. கருணாநிதி உரை
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது