குறள்: 137 14. ஒழுக்கம் உடைமை

அறத்துப்பால்இல்லறவியல்

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவ ரெய்தாப் பழி

மு. வரதராசனார் உரை

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை

ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

மு. கருணாநிதி உரை

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்

ஒழுக்கம் உடைமை அதிகாரம் முழுவதும்