குறள்: 139 14. ஒழுக்கம் உடைமை

அறத்துப்பால்இல்லறவியல்

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்

மு. வரதராசனார் உரை

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

சாலமன் பாப்பையா உரை

மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

மு. கருணாநிதி உரை

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்

ஒழுக்கம் உடைமை அதிகாரம் முழுவதும்