குறள்: 144 15. பிறனில் விழையாமை

அறத்துப்பால்இல்லறவியல்

எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்

மு. வரதராசனார் உரை

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?

மு. கருணாநிதி உரை

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்

பிறனில் விழையாமை அதிகாரம் முழுவதும்