குறள்: 145 15. பிறனில் விழையாமை
எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி
மு. வரதராசனார் உரை
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்
சாலமன் பாப்பையா உரை
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.
மு. கருணாநிதி உரை
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்