குறள்: 147 15. பிறனில் விழையாமை

அறத்துப்பால்இல்லறவியல்

அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்பெண்மை நயவா தவன்

மு. வரதராசனார் உரை

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்

மு. கருணாநிதி உரை

பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்

பிறனில் விழையாமை அதிகாரம் முழுவதும்