குறள்: 148 15. பிறனில் விழையாமை

அறத்துப்பால்இல்லறவியல்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கறனென்றோ ஆன்ற வொழுக்கு

மு. வரதராசனார் உரை

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்

மு. கருணாநிதி உரை

வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்

பிறனில் விழையாமை அதிகாரம் முழுவதும்