குறள்: 149 15. பிறனில் விழையாமை
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறற்குரியாள் தோள்தோயா தார்
மு. வரதராசனார் உரை
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்
சாலமன் பாப்பையா உரை
அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே
மு. கருணாநிதி உரை
பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்