குறள்: 150 15. பிறனில் விழையாமை

அறத்துப்பால்இல்லறவியல்

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று

மு. வரதராசனார் உரை

ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது

சாலமன் பாப்பையா உரை

அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.

மு. கருணாநிதி உரை

பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்

பிறனில் விழையாமை அதிகாரம் முழுவதும்