குறள்: 160 16. பொறையுடைமை

அறத்துப்பால்இல்லறவியல்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொ னோற்பாரிற் பின்

மு. வரதராசனார் உரை

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

மு. கருணாநிதி உரை

பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்

பொறையுடைமை அதிகாரம் முழுவதும்