குறள்: 161 17. அழுக்காறாமை

அறத்துப்பால்இல்லறவியல்

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்தழுக்கா றிலாத இயல்பு

மு. வரதராசனார் உரை

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.

மு. கருணாநிதி உரை

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்

அழுக்காறாமை அதிகாரம் முழுவதும்