குறள்: 191 20. பயனில சொல்லாமை

அறத்துப்பால்இல்லறவியல்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்

மு. வரதராசனார் உரை

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்

சாலமன் பாப்பையா உரை

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

மு. கருணாநிதி உரை

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்

பயனில சொல்லாமை அதிகாரம் முழுவதும்