குறள்: 192 20. பயனில சொல்லாமை

அறத்துப்பால்இல்லறவியல்

பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கட் செய்தலிற் றீது

மு. வரதராசனார் உரை

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

மு. கருணாநிதி உரை

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்

பயனில சொல்லாமை அதிகாரம் முழுவதும்