குறள்: 201 21. தீவினையச்சம்

அறத்துப்பால்இல்லறவியல்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை யென்னுஞ் செறுக்கு

மு. வரதராசனார் உரை

தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

சாலமன் பாப்பையா உரை

தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.

மு. கருணாநிதி உரை

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்

தீவினையச்சம் அதிகாரம் முழுவதும்