குறள்: 201 21. தீவினையச்சம்
மு. வரதராசனார் உரை
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
தீவினையச்சம் என்பது தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதல் எனப்பொருள்படும். தீவினை நிகழ்தல் உடலின் தொழில்; தீவினைக்கு அஞ்சுதல் மனத்தின் செயல்; தீவினையச்சம் என்பது செயலின் தீமை நிகழாமல் தடுத்தல் பொருட்டுத் தீய எண்ணங்கள் உள்ளத்தில் உண்டாவதைத் தடுக்க வேண்டும் என்பதைச் சொல்வதாகிறது எனத் தெளியலாம். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - பயப்படவேண்டியதிற்குப் பயப்படவேண்டும். தீயசெயல் அஞ்சப்படவேண்டும். விழுப்பங்களை (மதிப்புகளை) வேண்டுவோர் தீவினை செய்ய அஞ்சுவர். தீவினைப் பயன்கள் அதைச் செய்தவனை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கும். தீய நெறியில் நழுவிச் செல்லாதவன் கேடு இல்லாதவன் என அறியலாம். இவை இவ்வதிகாரப் பாடல்கள் தரும் செய்திகள்.
குறள்: 201 21. தீவினையச்சம்
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
குறள்: 202 21. தீவினையச்சம்
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
குறள்: 203 21. தீவினையச்சம்
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
குறள்: 204 21. தீவினையச்சம்
பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
குறள்: 205 21. தீவினையச்சம்
யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
குறள்: 206 21. தீவினையச்சம்
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
குறள்: 207 21. தீவினையச்சம்
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
குறள்: 208 21. தீவினையச்சம்
தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
குறள்: 209 21. தீவினையச்சம்
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
குறள்: 210 21. தீவினையச்சம்
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.