குறள்: 205 21. தீவினையச்சம்

அறத்துப்பால்இல்லறவியல்

இலனென்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றுப் பெயர்த்து

மு. வரதராசனார் உரை

யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

சாலமன் பாப்பையா உரை

தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

மு. கருணாநிதி உரை

வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்

தீவினையச்சம் அதிகாரம் முழுவதும்