குறள்: 208 21. தீவினையச்சம்

அறத்துப்பால்இல்லறவியல்

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயா தடியுறைந் தற்று

மு. வரதராசனார் உரை

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.

மு. கருணாநிதி உரை

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்

தீவினையச்சம் அதிகாரம் முழுவதும்