குறள்: 209 21. தீவினையச்சம்

அறத்துப்பால்இல்லறவியல்

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்துன்னற்க தீவினைப் பால்

மு. வரதராசனார் உரை

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.

மு. கருணாநிதி உரை

தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது

தீவினையச்சம் அதிகாரம் முழுவதும்