குறள்: 210 21. தீவினையச்சம்

அறத்துப்பால்இல்லறவியல்

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்

மு. வரதராசனார் உரை

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

சாலமன் பாப்பையா உரை

தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

மு. கருணாநிதி உரை

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க

தீவினையச்சம் அதிகாரம் முழுவதும்