குறள்: 203 21. தீவினையச்சம்

அறத்துப்பால்இல்லறவியல்

அறிவினு ளெல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்குஞ் செய்யா விடல்

மு. வரதராசனார் உரை

தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

மு. கருணாநிதி உரை

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்

தீவினையச்சம் அதிகாரம் முழுவதும்