குறள்: 212 22. ஒப்புரவறிதல்
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு
மு. வரதராசனார் உரை
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
மு. கருணாநிதி உரை
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்