குறள்: 219 22. ஒப்புரவறிதல்

அறத்துப்பால்இல்லறவியல்

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீரசெய்யா தமைகலா வாறு

மு. வரதராசனார் உரை

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

மு. கருணாநிதி உரை

பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்

ஒப்புரவறிதல் அதிகாரம் முழுவதும்