குறள்: 23 3. நீத்தார் பெருமை

அறத்துப்பால்பாயிரவியல்

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்பெருமை பிறங்கிற் றுலகு

மு. வரதராசனார் உரை

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது

சாலமன் பாப்பையா உரை

இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது

மு. கருணாநிதி உரை

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்

நீத்தார் பெருமை அதிகாரம் முழுவதும்