குறள்: 251 26. புலால் மறுத்தல்

அறத்துப்பால்துறவறவியல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்

மு. வரதராசனார் உரை

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.

சாலமன் பாப்பையா உரை

தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?

மு. கருணாநிதி உரை

தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்

புலால் மறுத்தல் அதிகாரம் முழுவதும்