குறள்: 252 26. புலால் மறுத்தல்

அறத்துப்பால்துறவறவியல்

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு

மு. வரதராசனார் உரை

பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை

பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.

மு. கருணாநிதி உரை

பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை

புலால் மறுத்தல் அதிகாரம் முழுவதும்